நாடு முழுக்க சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து.. வகுப்பு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி

டெல்லி: நாடு முழுக்க பத்தாம் வகுப்பு (CBSE 10th board exams) சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதியிலேயே தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவை ரத்து செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கலவரம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த வட கிழக்கு டெல்லி பகுதியில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளித் தேர்வின்போது எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment