கிரிக்கெட்டுங்கறது ஒரு விளையாட்டு தாங்க… அதவிட மனுஷங்களோட பாதுகாப்பு முக்கியம்

லண்டன் : கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமே, அதையும் மீறி வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ளவுள்ள தொடரை ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் யோசனை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் கிரிக்கெட்டை நடத்த வேண்டிய தேவை எற்பட்டால் அதை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும், தற்போது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

காலி மைதானங்களில் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளை காலி மைதானங்களில் நடத்துவதற்கு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தொடரை காலி மைதானங்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் உறுதி இந்நிலையில், அதிகமான ரசிகர்கள் மத்தியில் விளையாடினாலும், யாருமற்ற காலி மைதானங்களில் விளையாடினாலும் வெற்றி பெறுவது என்பதே முதன்மையானது என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். நம்முடைய லோகோவில் 3 சிங்கங்கள் உள்ள நிலையில் வெற்றியே பிரதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலில் போட்டிகளை துவங்க வேண்டும் கொரோனா வைரசால் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் நடத்துவது என்பதே தற்போதை முதல் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் அதை முதலில் துவங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் காலி மைதானங்களில் போட்டிகளை நடத்திவிட்டு பின்பு சூழலுக்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமே என்று கூறியுள்ள பென் ஸ்டோக்ஸ், அதையும் தாண்டி வீரர்கள், ரசிகர்கள் போன்றவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். ஒரு அணி மட்டுமின்றி கிரிக்கெட்டை சார்ந்த அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment