சிவகாசி ஊரடங்கு தளர்வு

சிவகாசி ஊரடங்கு தளர்வு

கொரோனா ஊரடங்கில் சிவகாசி சிவப்பு மண்டலத்தில் உள்ள நிலையில் இன்று முதல் இதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் வழிகாட்டு முறைகள் … குறித்த அறிவிப்பை கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ளார். தடைகள் என்ன… * பள்ளி, கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள். * மத சம்பந்தமான கூட்டங்கள் தடை. * அரசியல், விளையாட்டு, தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், தங்கும் விடுதிகள். * வாடகை கார்கள், ஆட்டோக்கள் . * இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது. * திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் . * குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள், ஷோரூம்கள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள். * டீ கடைகள், சலுான் , அழகு நிலையங்கள் தடை இல்லாதவை… * அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி. * ஓட்டல்கள்(பார்சல் மட்டும்) பேக்கரிகள் காலை 6:00 முதல் இரவு 9:00 மணி. * ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமான பொருட்கள், மின்சாதன கடைகள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி.( துணை ஆட்சியர் நிலை அலுவலர் அனுமதியோடு) * அலைபேசி, கம்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகனங்கள், கண் கண்ணாடிகள் தொடர்பான கடைகள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி . ( தாசில்தார் அனுமதியோடு ) * பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அடையாள அட்டையுடன் பணி செய்யலாம். கட்டாயம் தேவைகள்… * கடைகளின் நுழைவு பகுதியில் வாடிக்கையாளர்கள் கை கழுவ வசதி . * மாஸ்க் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி . * கடை வெளியே சமூக இடைவெளி கோடுகளுடன் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். * விதிகள் மீறப்பட்டால் கடை அனுமதி ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும். அச்சகங்கள் … * அனைத்து பகுதி அச்சக தொழிலகங்கள் 50 சதவீத தொழிலாளர்கள் அதாவது 20 நபர்களுடன் இயங்க அனுமதி.இதற்கான விபரங்களை சிவகாசி சப் கலெக்டர்அலுவலகத்தில் தெரிவித்து இயக்கலாம். * நகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி இல்லை. ஊரக பகுதி ஆலைகளுக்கு அனுமதி. * நகராட்சி பகுதி ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் கலெக்டர்அனுமதியுடன் செயலபடலாம். -பட்டாசு ஆலைகள் இயங்குவது எப்படி… * நகர் பகுதி பட்டாசு ஆலைகள் இயங்க அனுமதி இல்லை. * ஊரக பகுதியில்50 சதவீத தொழிலாளர்களுடன் ஷிப்ட் முறையில் பணி. * ஆலை இடம், உரிமம், பணியாளர் எண்ணிக்கை, எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் விவரம், வாகன விவரங்களுடன் சிவகாசி தனி தாசில்தார்(தீ.தொ.ஆ.,) அலுவலகத்தில் தகவல் தெரிவித்து இயக்கலாம். தொழிலாளர்கள், வாகன அடையாள அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். * தீப்பெட்டிஆலைகள் நகர், கிராம பகுதிகளில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதோடு பட்டாசு ஆலைக்கான விதிகளே இதற்கு பொருந்தும்.

Related posts

Leave a Comment