ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் காலியாக உள்ள மூத்த நிர்வாக அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலிப் பணியிடம் உள்ள நிலையில் எம்.எஸ்.சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் மேலாண்மை : மத்திய அரசு பணி : மூத்த நிர்வாக அதிகாரி மொத்த காலிப் பணியிடம் : 01 கல்வித் தகுதி : எம்.எஸ்சி வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 62 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.…

Read More

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்! ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி கணினித் துறை பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : Translational Health Science and Technology Institute (THSTI) மேலாண்மை : மத்திய அரசு பணி : கம்ப்யூட்டர் புரோகிராமர் மொத்த காலிப் பணியிடங்கள் : 04 கல்வித் தகுதி : பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்.சி. கம்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் அதிகாரப்பூர்வ…

Read More

நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. 7 பேர் காயம்

நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சியில் 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியிலிருந்த 7 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழலும் போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இந்த நிலையில் இங்கு 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழுந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறார்கள். அந்த 7 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. லாக்டவுனால் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லாத…

Read More

BREAKING NEWS

இன்றைய கொரோனா பாதிப்பு | தமிழ்நாடு 🔲தமிழ்நாட்டில் இன்று 580 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 🔲சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி 🔲தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 2 பேர் உயிரிழப்பு

Read More

மருத்துவமனைக்கு உபகரணங்கள்

ராஜபாளையம்:ராஜபாளையம் அரசு மருத்துவ மனைகளுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கோல்ட் ஹார்ட் மாவட்ட தலைவர் கோதண்டராமன், உதவி ஆளுநர் கார்த்திக், மாவட்ட உதவி ஒருங்கிணபைபாளர் லட்சுமி நாராயணன், ரோட்டரி சென்ட்ரல் தலைவர் முத்துராமலிங்க பாண்டியன், சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை மருத்துவர் பாபுஜி, மாரியப்பனிடம் வழங்கினர்.அப்போது கொரோனா தடுப்பு டாக்டர்கள்,செவிலியர்களுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Read More

சிவகாசி அரிமா சங்கம் சார்பாக

சிவகாசி:சிவகாசி அரிமா சங்கம் சார்பாக 7 கிராமங்களில் உள்ள விதவைகள், ஊனமுற்றோர், முதியோர் போன்ற 680 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு வழங்கப் பட்டது.அரிமா தலைவர் கூடலிங்கம், செயலாளர் கவுரிசங்கர், பொருளாளர் பாண்டியராஜ், ஆணையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர்.

Read More

போயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதோடு தொற்று அதிகரிப்பால் கூடும் ஊரடங்கு நாட்களும் கூடும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய ,மாநில அரசுகள் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.மாவட்டத்தில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகப்பு மண்டலத்தில் விருதுநகர் உள்ள நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மக்கள் தொற்று பரவல் அச்சமின்றி சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மொத்தமாக வாங்கி செல்லாமல் தினமும் காய்கறி, மளிகை கடைகளை நாடுவதால் காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மாலை நேரங்களிலும் பலர் இரு சக்கர வாகனங்களில் உலா வருகின்றனர்.ஓட்டலில் பார்சல் வாங்க,…

Read More

புதிய மருந்து கண்டுபிடிப்பு ஒழுங்குமுறையில் மாற்றம் வேண்டும்! பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: ‘புதிய மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் விஷயத்தில், நம் நாட்டில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள், பழமையானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்நிலை, போர்க்கால அடிப்படையில், உடனடியாக மாற வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார். புதிய நோய்களுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிப் பணிகளில், அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபடும் போது, அந்த புதிய மருந்துகளை, மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான ஒப்புதல்களை பெற, அந்நாடுகளில், மிக சுலப மான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதுவே, இந்தியா போன்ற நாடுகளில், புதிய மருந்துகளை, எலிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யவே, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக, சில ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். குறைபாடுகள்: உதாரணத்திற்கு, ‘கொரோனா’ தொற்றை கட்டுப்படுத்த, ‘ரெம்டிசிவிர்’ போன்ற மருந்துகள் நல்ல பலன்களை தருகையில், அந்த மருந்தை,…

Read More

சிவப்பு மண்டலமான சென்னைக்கு பிறக்குது விடிவு; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட, சென்னை மாநகருக்கு விடிவு பிறக்கும் விதத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொற்று தடுப்பு பணிக்கு என, பொறுப்பு அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், சென்னையில் தொற்று பரவலை தடுக்க, ஒவ்வொரு மண்டலத்துக்கும், தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில், சென்னை, முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களில், நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் அதிகரித்தபடி உள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இரட்டை இலக்கத்தில் இருந்து, மூன்று இலக்கத்திற்கு மாறியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும், அதிகரித்தபடி உள்ளது. நேற்று வரை, சென்னையில் மட்டும், 1,082 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சென்னையில் நோய் பரவலை…

Read More

ஊரடங்கிற்கு பின் 50% பயணிகளுடன் பஸ்கள் இயக்கம்

சென்னை: ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என 8 போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளதாவது: ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாஸ்க், கையுரை, சானிடைசர் வழங்க வேண்டும். பஸ்களில், இருக்கைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி வேண்டும். பயணிகள் இருக்கையில் அமர குறியீடு (மார்க் செய்தல்) செய்ய வேண்டும். மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும். வரிசையில் நின்று பஸ்களில் ஏற வேண்டும். கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணம்…

Read More