ஊரடங்கிற்கு பின் 50% பயணிகளுடன் பஸ்கள் இயக்கம்

சென்னை: ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என 8 போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளதாவது: ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாஸ்க், கையுரை, சானிடைசர் வழங்க வேண்டும். பஸ்களில், இருக்கைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி வேண்டும். பயணிகள் இருக்கையில் அமர குறியீடு (மார்க் செய்தல்) செய்ய வேண்டும்.

மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும். வரிசையில் நின்று பஸ்களில் ஏற வேண்டும். கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். முடிந்த வரை மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம். பஸ் ஜன்னல்கள் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். பஸ் நிலையத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும். ஊரடங்கு முடிந்து பஸ்களை இயக்கப்படும் போது இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment