திருநெல்வேலியில் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி பணியில்ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்

ரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் எந்த விதத்திலும் பரவும் என்ற அச்சம் இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து வெளிப்புறங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் ஆட்களை ஏற்றி வருவதால், அவர்களை கண்கானிக்க உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டு மேலிருந்து காவலர்கள் 24 மணிநேரமும், கண்காணித்து வருவதை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

 இதனையடுத்து இன்று(06.05.2020) கங்கைகொண்டான் சோதனை சாவடியில் பணியில்  ஈடுபட்டு வரும் *காவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு  வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால்  அவர்களுக்கு குளிர்பானங்கள வழங்கியும் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை  வழங்கினார். மேலும்  அனைவரும் பணிபுரியும் போது முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து,  பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

காவலர்களின் நலனில் தனி அக்கறைகொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் எஸ். பி. ஓம்பிரகாஷ் மீனா அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல்களில் இருந்து *காவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோரை பாதுகாத்து கொள்வதற்கு சானிடைசர் முகக்கவசம் உபகரணம் போன்றவை  நேரில் வந்து வழங்கியதைக் காவலர்கள் மனதார வாழ்த்தினார்கள். எஸ்.பி தனிப்பிரிவு ஆய்வாளர் காவலர்களின் நலன் குறித்த தகவல்களை எஸ்.பி.யின் கவனத்திற்கு உடனுக்குடன் எடுத்து சென்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவுவதா  காவலர்கள் பலர் எஸ்.பி தனிப்பிரிவு ஆய்வாளர்  அவர்களையும்  மனதார பாராட்டி வருகிறார்கள் திருநெல்வேலி எஸ். பி. ஓம்பிரகாஷ் மீனா வின் இந்த சிறப்பான பணிக்கு போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் ராயல் சல்யூட்

Related posts

Leave a Comment