தொட்டே 3 மாசமாச்சு.. திணறப் போகிறார்கள்.. இப்படிச் சொல்லிட்டாரே ரோகித் சர்மா

தொட்டே 3 மாசமாச்சு.. திணறப் போகிறார்கள்.. இப்படிச் சொல்லிட்டாரே ரோகித் சர்மா

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. வீரர்களும் குடும்பத்தினருடன் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் முகம்மது ஷமியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் கலந்து கொண்டு பேசினார் ரோகித் சர்மா. அப்போது லாக்டவுனுக்குப் பிந்தைய நிலை குறித்து அவர் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

லைவ் சாட்டில் சர்மா ரோகித் சர்மா கூறுகையில், லாக்டவுனுக்குப் பிறகு உடனேயே வீரர்களால் விளையாட முடியாது. குறைந்தது ஒன்றரை மாதமாவது அவர்களுக்கு பயிற்சி தேவைப்படும். பேட்டைப் பிடித்து களத்தில் நிற்க நிச்சயம் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். பந்தை எந்த இடத்தில் அடித்தால் அது பறக்கும் என்பதைக் கூட அவர்கள் புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்படும். காரணம் அனைவருமே அந்த டச்சை மறந்திருப்பார்கள் என்றார்.

பேட்டைப் பிடிக்கவே பயிற்சி தேவை பேட்டைப் பிடிப்பதற்கும், பந்தை சரியாக கணித்து அடிப்பதற்கும் கூட அவகாசம் தேவைப்படும். ஒரு ரிதமுக்கு அவர்கள் வர நிச்சயம் அவகாசம் தேவைப்படும். அதிலும் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசப்பட்டால் அதை கணித்து அடிக்கவே டைம் தேவைப்படும். நிறைய பயிற்சிகளும், பேட்டிங், பவுலிங் குறித்த டச்சும் வீரர்களுக்கு நிச்சயம் தேவைப்படும் என்றும் ரோகித் கூறியுள்ளார்.

பேட்டை தொட்டு 3 மாசமாச்சு ஒன்றரை மாத தீவிரப் பயிற்சிக்குப் பிறகுதான் வீரர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். எந்த வீரராக இருந்தாலும் பயிற்சி அவசியம். 3 மாதத்திற்கும் மேலாகி விட்டது பேட்டை தொட்டே. எனவே மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அவசியமாகும். எல்லோருக்கும் இதே நிலைதான். எனவேதான் பயிற்சி அவசியம் என்று நான் சொல்கிறேன் என்றார் ரோகித் சர்மா.

தீவிரப் பயிற்சி அவசியம் இது உண்மைதான். பேட்டிங்கையே பலரும் மறந்திருப்பார்கள். வீட்டுக்குள், தோட்டத்தில் விளையாடுவது எல்லாம் பயிற்சிக் கணக்கில் சேர முடியாது. மைதானத்தில் விளையாடி பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டிகளை எளிமையாக சந்திக்க முடியும். எனவே அனைத்து வீரர்களுக்கும் பந்து வீச்சு, பேட்டிங், கீப்பிங், பீல்டிங் என எல்லாவற்றிலுமே தீவிர பயிற்சி அவசியமாகிறது. இதைத்தான் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/batsmen-need-intensive-practice-once-lock-down-is-ovr-says-rohit-sharma/articlecontent-pf63982-019629.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-PKL

Related posts

Leave a Comment