போயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாடுவதால் நோய்

பரவும் அபாயம் உள்ளதோடு தொற்று அதிகரிப்பால் கூடும் ஊரடங்கு நாட்களும் கூடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய ,மாநில

அரசுகள் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.மாவட்டத்தில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகப்பு மண்டலத்தில் விருதுநகர் உள்ள நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மக்கள் தொற்று பரவல் அச்சமின்றி சர்வ

சாதாரணமாக நடமாடி வருகின்றனர்.

வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மொத்தமாக வாங்கி செல்லாமல் தினமும் காய்கறி, மளிகை கடைகளை நாடுவதால் காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மாலை நேரங்களிலும் பலர் இரு சக்கர வாகனங்களில் உலா வருகின்றனர்.ஓட்டலில் பார்சல் வாங்க, மெடிக்கலில்

மாத்திரை வாங்க என காரணம் கூறியபடி அங்குமிங்கும் அலைகின்றனர்.

பகல் நேரத்தில் விட மாலை நேரத்தில் நடமாட்டம் குறைவாக இருந்தபோதும் சமூக

இடைவெளி இன்றி இருசக்கர வாகனத்தில் இருவராக வலம் வருவதால் நோய் தொற்று
அபாயம் உள்ளது.இதில் பெரும்பாலானோர் கையுறை, முக கவசம் இன்றி உலா

வருகின்றனர்.பரவலை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில்

சுற்றுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும்

காலங்களிலாவது பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டிற்குள் தனித்திருக்க

வேண்டும்.

Related posts

Leave a Comment