ஹேப்பி பர்த்டே அதர்வா.. இந்த பானா காத்தாடி இன்னும் மேலே பறக்கட்டும்.. டிரெண்டாகும் #HBDAtharvaa

சென்னை: நடிகர் அதர்வாவின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை, பரதேசி, 100 என பல படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDAtharvaa என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கிங் அதர்வா கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கேலண்டர் ஷூட் ஒன்றில் ராஜா கெட்டப் போட்டு நடிகர் அதர்வா போஸ் கொடுத்திருந்தார். அதர்வாவின் பர்த்டே காமன் டிபியாக அந்த புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே அதர்வா என்றும், கிங் அதர்வா என்றும், நடிகர் மாதவனை மேடி என அழைப்பது போல அதர்வாவை ஆடி என அழைத்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment