நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. 7 பேர் காயம்

நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சியில் 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியிலிருந்த 7 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழலும் போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

இந்த நிலையில் இங்கு 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழுந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த 7 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்ததால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. லாக்டவுனால் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லாத நிலையில் இன்று உற்பத்தியை தொடங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 13 பேர் பலியான நிலையில் இன்று நெய்வேலியில் விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment