பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்! ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Translational Health Science and Technology Institute- THSTI) காலியாக உள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி கணினித் துறை பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Translational Health Science and Technology Institute (THSTI) மேலாண்மை : மத்திய அரசு பணி : கம்ப்யூட்டர் புரோகிராமர் மொத்த காலிப் பணியிடங்கள் : 04 கல்வித் தகுதி : பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்.சி. கம்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.thsti.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க

வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thsti.in/ethsti/ethsti.php அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related posts

Leave a Comment