ராகுல் காந்தி எச்சரிக்கை

சென்னை: அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து பிரதமர் செயல்படாமல் போனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோற்றுபோகும் வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இருந்தபடி இன்று வீடியோ மூலமாக செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதன், தொகுப்பு இதோ: பிரதமர் நரேந்திர மோடியின் பணியாற்றும் பாணி என்பது பிற நேரங்களில் வேண்டுமானால் பலன் அளிக்கலாம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கான ஒரு பிரச்சனையை இந்த நாடு எதிர் கொண்டு இருக்கக் கூடிய நிலையில், மோடியின் வழக்கமான பாணியில் எந்த பலனும் இருக்காது.

Read More

460 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை தயார்

புழல்:கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், புழல் தனியார் கல்லுாரிகளில், 460 படுக்கை வசதிகளுடன், தனி வார்டுகள் தயாராகி உள்ளன. சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டான்லி, ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால், கோயம்பேடு தொற்று பரவலால், சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, இட வசதியின்றி, சென்னையின் சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்கள் தயார் செய்யப்படுகின்றன. அந்த வகையில், மாதவரம் மண்டலம், புழல் அருகே சூரப்பட்டில், பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், 300 படுக்கை வசதி களுடன், கொரோனா வார்டு தயாராகி உள்ளது.அங்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து, தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், புழல், வள்ளுவர் நகர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில், 160 படுக்கை வசதியுடன்,…

Read More

வெள்ளை மாளிகை ஊழியருக்கு ‘கொரோனா’ : பீதியில் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும், வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதிபர் டிரம்ப் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளன. இந்நிலையில் அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என மருத்துவர்களின் முடிவுகள் வெளியாயின இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் வேலட் எனப்படும் அந்தரங்க உதவியாளருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.இது வெள்ளை மாளிகை மட்டுமின்றி டிரம்ப்பையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வேலட் எனப்படுபவர் அமெரிக்கா ராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி வெள்ளை மாளிகையில்…

Read More