வெள்ளை மாளிகை ஊழியருக்கு ‘கொரோனா’ : பீதியில் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும், வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதிபர் டிரம்ப் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளன. இந்நிலையில் அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என மருத்துவர்களின் முடிவுகள் வெளியாயின

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் வேலட் எனப்படும் அந்தரங்க உதவியாளருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.இது வெள்ளை மாளிகை மட்டுமின்றி டிரம்ப்பையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வேலட் எனப்படுபவர் அமெரிக்கா ராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்து தரும் அதிகாரி ஆவார். டிரம்ப் உள்நாடு பயணம் செய்தாலும் வெளிநாடு பயணம் செய்தாலும் உடன் நிழல் போல் செல்பவர்..
இந்நிலையில் டிரம்ப்பின் வேலட்டிற்கு தொற்று உறுதியானதால், இப்போது டிரம்ப்பையும் பரிசோதனை செய்ய வேண்டும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Leave a Comment