460 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை தயார்

புழல்:கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், புழல் தனியார் கல்லுாரிகளில், 460 படுக்கை வசதிகளுடன், தனி வார்டுகள் தயாராகி உள்ளன.

சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டான்லி, ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால், கோயம்பேடு தொற்று பரவலால், சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, இட வசதியின்றி, சென்னையின் சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்கள் தயார் செய்யப்படுகின்றன.

அந்த வகையில், மாதவரம் மண்டலம், புழல் அருகே சூரப்பட்டில், பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், 300 படுக்கை வசதி களுடன், கொரோனா வார்டு தயாராகி உள்ளது.அங்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து, தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், புழல், வள்ளுவர் நகர் அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில், 160 படுக்கை வசதியுடன், மற்றொரு வார்டும் தயாராகி வருகிறது. அங்கு, நாளைக்குள் தொற்று பாதித்தவர்களுக்கு, சிகிச்சை துவங்கி விடும்.

Related posts

Leave a Comment