தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 526 பேருக்கு கொரோனா

சென்னை:உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் மாநிலத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 6 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 605 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 40 பேர் பலியாகி இருந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,  வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 824  பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து…

Read More

ரசிகர்கள் இன்றி விளையாடினால் விறுவிறுப்பு இருக்காது – விராட்கோலி

ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதில் விறுவிறுப்பு இருப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. கொரோனா பிரச்சினை தணிந்ததும் கிரிக்கெட் போட்டிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் தொடங்குவதில் எல்லா கிரிக்கெட் வாரியங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. நோய் தொற்றில் இருந்து அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் பொருட்டு ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, போட்டி நடந்தால் போதும் என்ற நிலைக்கு பல நாட்டு வீரர்கள் வந்து விட்டனர். எனவே கொரோனா பாதிப்பு குறைந்ததும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் – டோனி வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியுடன் மனநல ஆலோசகர் எப்போதும் இருக்க வேண்டும் – டோனி வேண்டுகோள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தை சமாளித்து சாதிக்க உதவுவதற்காக ‘எம்போர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பு சார்பில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான 38 வயது டோனி காணொலி காட்சி மூலம் பேசுகையில் கூறியதாவது:- ‘இந்தியாவை பொறுத்தமட்டில் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது இன்னும் பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் பொதுவாக நாம் அதனை மனநோய் என்று…

Read More

Udhayanidhi Stalin

#OndrinaivomVaa நலத்திட்ட உதவியின் மூலம் எழும்பூர் சேவா சமாஜ் இல்ல குழந்தைகளுக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களையும், காலை சிற்றுண்டியையும் வழங்கினேன். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் @PKSekarbabu அவர்களுக்கும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், பகுதி கழகச் செயலாளர்கள் வேலு, விஜயகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் வானவில் விஜய் உள்ளிட்டோருக்கும், உடனிருந்த வட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி. #UdhayanidhiStalin #OndrinaivomVaa

Read More

மாநில முதல்வர்களுக்கு அதிகாரம்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

புதுடில்லி: ”எல்லா அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்திலேயே குவித்து வைத்திருந்தால், கொரோனா வைரசை ஒழிக்க முடியாது. மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, அவர்களுக்கான அதிகாரத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும்,” என, காங்., – எம்.பி., ராகுல் கூறினார். நம்பிக்கை: கொரோனா வைரஸ் பிரச்னை குறித்து, காங்., – எம்.பி., ராகுல் கூறியதாவது: கொரோனா வைரசால், நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. எல்லா அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்தில் குவித்து வைத்திருந்தால், பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. வைரஸ் ஒழிப்பில், நாம் தோற்று விடுவோம். அனைத்து மாநில முதல்வர்களுடன், அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும். வைரஸ் பாதிப்பை…

Read More

கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்பு

சென்னை: செமஸ்டர் தேர்வு, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும், ஆன்லைனில் நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லுாரிகளுக்கும், இரண்டு மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை, ஜூலையில் நடத்தலாம் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை, ஆன்லைன் வழியில் விரைந்து முடிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை வரை அவகாசம் கிடைத்துள்ளதால், விடுபட்ட பாடங்களையும் முடித்த பின், தேர்வை நடத்தலாம் என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

Read More

‘மின் சட்ட திருத்தத்தை தமிழக அரசு ஏற்காது’

சென்னை : ‘மத்திய அரசால் வெளியிடப்பட்டு உள்ள, வரைவு மின்சார சட்ட திருத்தத்தை கைவிட, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு, ‘வரைவு மின்சார சட்ட திருத்தம் – 2020’ குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்டுள்ளது. அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகளை நீக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம். ஏற்கனவே, மின் வாரியத்தை, தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கையை கைவிடுமாறு, பிரதமருக்கு, தமிழக முதல்வர், 2014ல் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த, 2018 வரைவு சட்ட திருத்தத்தில், நடுத்தர மக்கள் பெறும் மானிய விலை மின்சாரம் மற்றும் விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், மாநில அரசு நேரடியாக செலுத்துகிறது. இது…

Read More

நாடு முழுதும் பள்ளிகளில் 50 – 50 திட்டம் அமல்?

புதுடில்லி : பள்ளிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, 50 – 50 என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது, ஒரு வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில், பாதி பேரை மட்டும், பள்ளிக்கு வர அனுமதிப்பது; மீதி மாணவர்களை, வீடுகளில் இருந்தபடியே பாடம் படிக்க ஏற்பாடு செய்வது தான், இந்த திட்டம். இதற்காக, கல்வி தொலைக்காட்சி சேனல்களுடன் கைகோர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்த திட்டம் அமலுக்கு வருமா என்பது, விரைவில் தெரிய வரும். திறப்பு எப்போது? சீனாவில் பரவ துவங்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டுள்ளது. இந்தியாவில், மார்ச் மாத துவக்கத்தில், வைரஸ் பரவ ஆரம்பித்தது. தொற்று பரவலை தடுக்க, நாடு முழுதும் மார்ச், 15 முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பள்ளிகளில், ஆண்டு இறுதி…

Read More

சென்னையில் 279 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மே 09) ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் உயரும் பாதிப்பு எண்ணிக்கையில் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய வழக்குகளே அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இன்று விழுப்புரத்தில் 67 பேர், செங்கல்பட்டில் 40 பேர், பெரம்பலூரில் 31, திருவள்ளூரில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 329 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 5,752 பேர், 60 வயதை கடந்தவர்கள் 454 பேர் உள்ளனர். இன்று…

Read More

சந்தை அமைப்பு பணி முதல்வர் ஆலோசனை

சென்னை : சென்னையை அடுத்த திருமழிசையில், தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்படுவது குறித்து, அதிகாரிகளுடன், முதல்வர், இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலுக்கு வழிவகுத்ததால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. திருமழிசையில், தற்காலிக மொத்த காய்கறி சந்தை, அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். தற்காலிக சந்தையில், நோய் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார். தற்காலிக சந்தை, நாளை முதல் செயல்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. துறை அமைச்சரான, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேனி சென்றிருப்பதால், நேற்றைய கூட்டத்தில், அவர் பங்கேற்கவில்லை. தற்காலிக சந்தையை முதல்வரும், துணை முதல்வரும், இன்று நேரில்…

Read More