சென்னையில் 279 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மே 09) ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் உயரும் பாதிப்பு எண்ணிக்கையில் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய வழக்குகளே அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது.

இன்று விழுப்புரத்தில் 67 பேர், செங்கல்பட்டில் 40 பேர், பெரம்பலூரில் 31, திருவள்ளூரில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 329 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 5,752 பேர், 60 வயதை கடந்தவர்கள் 454 பேர் உள்ளனர். இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

Leave a Comment