கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்பு

சென்னை: செமஸ்டர் தேர்வு, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும், ஆன்லைனில் நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கல்லுாரிகளுக்கும், இரண்டு மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை, ஜூலையில் நடத்தலாம் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை, ஆன்லைன் வழியில் விரைந்து முடிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை வரை அவகாசம் கிடைத்துள்ளதால், விடுபட்ட பாடங்களையும் முடித்த பின், தேர்வை நடத்தலாம் என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

Related posts

Leave a Comment