சென்னை: பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொண்ட நடிகை சாய் பல்லவியின் 28வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மலர் டீச்சரை மறக்கடிக்க செய்யும் விதமாக தனுஷின் மாரி படத்தில் ஆட்டோ ஆனந்தியாக வூடு கட்டி நடித்திருப்பார் சாய் பல்லவி.
தென்னிந்திய நடிகைகளிலேயே திறமையான நடிகைகளில் சாய் பல்லவிக்கும் தனி இடம் உண்டு. இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்ப் பொண்ணு பிரேமம் படத்தில் நாயகியாக அறிமுகமானதால் சாய் பல்லவியை பலரும் கேரள நடிகையாக நினைத்திருப்பார்கள். ஆனால், அதுதான் இல்லை. தமிழ்நாட்டின் கோத்தகிரியில் 1992ம் ஆண்டு மே 9ம் தேதி பிறந்தவர் நடிகை சாய் பல்லவி. நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சாய் பல்லவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தாம் தூம் பிரேமம் படத்திற்கு முன்னதாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் மற்றும் கஸ்தூரி மான் உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்திருப்பார். 2008ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஈ டிவி தெலுங்கில் ஒளிபரப்பான தீ அல்டிமேட் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டார்.
டிரெண்டிங் நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் #HappyBirthdaySaiPallavi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். திறமையான நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து டிவீட்களை பதிவிட்டு வருகின்றனர்
#HappyBirthdaySaiPallavi