S.Thangapandian Rajapalayam MLA

இராஜபாளையம் தொகுதியில் இன்று 9.5.2020 தளவாய்புரம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் நமது MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார், ஆய்வின் போது நியாயவிலைக்கடையில் வழங்கும் அரிசி,பருப்பு ஆகியவை தரமானதாக உள்ளதா என்று பரிசோதித்து பொது மக்களிடமும் கேட்டறிந்தார்.மேலும் பொதுமக்களிடம் கூறுகையில் ரேஷன்கடைகளில் தரமான அரிசி வழங்கக்கோரி விருதுநகர் மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகிய KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தங்கம் தென்னரசு MLA அவர்கள் A.R.R.சீனிவாசன் MLA அவர்களுடன் நானும் மாவட்டஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம் அதற்கு ஆட்சியர் அவர்கள் தரமான அரிசியை வழங்குவதாக உறுதியளித்தார் , அதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்வதாக MLA அவர்கள் கூறினார்.அப்பொழுது கூட்டத்தில் நின்ற குருவம்மாள் என்ற பெண்மணி தி.மு.க தலைவர் தளபதி ஸ்டாலின் ஐயா அவர்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தாலும் தி.மு.க வினரின் எதிர்ப்பினாலும் டாஸ்மாக் கடை அடைத்ததற்கு நமது MLA அவர்களிடம் தி.மு.க தலைவர் தளபதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.நமது MLA அவர்களும் கண்டிப்பாக தளபதியார் அவர்களிடம் தெரிவிப்பதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.மேலும் MLA அவர்கள் பொதுமக்களிடம் கூறுகையில் எங்கள் தலைவர் தளபதி ஸ்டாலின் ஐயா முதலமைச்சர் ஆனவுடன் ரேஷன் கடைகளில் பொன்னி அரிசி வழங்க ஆணையிடுவார் எனவும் மேலும் ரேஷன் கடை ஊழியர்களிடம் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் சமூக விலகலை கடைபிடிக்கவும்,முககவசம் அணிந்து வர வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பூமாரி மாரிமுத்து ஊராட்சி கிளை செயலாளர் தங்கமணி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment