பள்ளி திறக்கும் நாளில் புத்தகம்; அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், புத்தகம், பேக், ஷூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில், அவர் நேற்று கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கும் நாளன்று, மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேக், ஷூ போன்றவை கிடைக்கும் வகையில், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது. பள்ளி பாடப்புத்தகம், நோட்டுகள் போன்றவை, 80 சதவீதம் அச்சிடப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள, சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால், ஜவுளித் துறை முடங்கி உள்ளது. இதனால், மாணவ – மாணவியருக்கான சீருடை தயாரிப்பு பணி தாமதமாகிறது.

இருப்பினும், கொரோனா பிரச்னை சீரானதும், விரைவாக சீருடைகள் தயாரிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து, முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 25 சதவீத மாணவர்களை சேர்ப்பதற்காக, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாதென, ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

Related posts

Leave a Comment