‘சிப்காட்’ நிறுவனங்கள் செயல்பட 19 விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை : தமிழக தொழில் பூங்காக்களில் செயல்படும் தொழிற்சாலைகள், 19 விதிமுறைகளுடன் செயல்பட, ‘சிப்காட்’ நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

சிப்காட் என்ற, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின், 19 தொழில் பூங்காக்களில், 400க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்க துவங்கி உள்ளன. இந்த நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, சிப்காட் வெளியிட்டுள்ளது.அதன் விபரம்: நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிக்குள் வசிக்கும் தொழிலாளர்களை, பணியில் ஈடுபடுத்தக் கூடாது. நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்த விபரத்தை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, தினமும் பெற்று, நுழைவாயிலில் விளம்பரப்படுத்த வேண்டும் உடல் ரீதியாக தகுதி பெற்ற பணியாளர்கள் மட்டுமே, பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் வரும் வாயில் மற்றும் வெளியேறும் வாயில், தனித்தனியாக இருப்பதுடன், அனைத்து பணியாளர்களையும், முறையாக பரிசோதித்த பிறகே, அனுமதிக்க வேண்டும் பணி நேரத்தை, ஒவ்வொரு, ‘ஷிப்ட்’டுக்கும், 30 நிமிட இடைவெளியில் திட்டமிடுதல் வாயிலாக, தொழிலாளர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். 200 முதல், 1,000 பேர் பணியாற்றும் நிறுவனங்களில், இரு தினங்களுக்கு ஒரு முறை, ஒரு மருத்துவர் பரிசோதனைக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய, துணியிலான முகக் கவசங்களை, பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அனைத்து பணியாளர்களுக்கும், மருத்துவ காப்பீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவை உட்பட, 19 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Related posts

Leave a Comment