சிறப்பு ரயில்களில் கூடுதல் பயணிகளை அனுமதிக்க முடிவு- 3 ஸ்டேசன்களில் நிற்கும்

டெல்லி: லாக்டவுனால் பிற மாநிலங்களில் தவிக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களில் மேலும் 500 பேர் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பல மாநிலங்களில் பிற மாநில தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் மே 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மொத்தம் 428 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 5 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த ரயல்களில் 1200 பேர் மட்டுமே பயணிக்க முடியும். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி கூடுதலாக 500 பயணிகளை அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

Related posts

Leave a Comment