டி20 அணிக்கு அந்த இளம் வீரர் கேப்டன்.. டெஸ்ட்டுக்கு மட்டும் கோலி.. பிசிசிஐ அதிரடி.. கசிந்த தகவல்

மும்பை : பிசிசிஐ இரண்டு இந்திய அணிகளை தயார் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் கிரிக்கெட் போட்டிகள் ஆடத் துவங்கும் போது அதிக போட்டிகளில் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் மூலம் வருமானமும் பெருகும். அந்த நிலையை சமாளிக்க பிசிசிஐ ஒரே நேரத்தில் இரு இந்திய அணிகளை போட்டிகளில் ஆட வைக்க திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இளம் வீரர் கேப்டன் அதில் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு இளம் வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்கவும் திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஆடத் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் தடை 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் துவங்கி இருக்க வேண்டிய தொடர் இதுவரை துவங்கவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

பிசிசிஐ நஷ்டம் 2020 ஐபிஎல் தொடரால் மட்டுமே சுமார் 3000 கோடி வரை பிசிசிஐ அமைப்புக்கு நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது பிசிசிஐ மட்டுமின்றி, விளம்பரதாரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் என அனைவருக்கும் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் பிசிசிஐ செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரே நேரத்தில் இரு போட்டிகள் அதனால், அதிக போட்டிகளில் ஆட வேண்டிய நிலை ஏற்படும். அந்த சிக்கலை தீர்க்க தனித்துவமான திட்டம் ஒன்றை பிசிசிஐ வைத்துள்ளதாக தகவல் கசிந்தது. அதன்படி, ஒரே சமயத்தில் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் அல்லது டி20 தொடரையும் நடத்த முடியும்

ஆஸ்திரேலியா உதாரணம் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பங்கேற்காமல் இந்தியாவில் டெஸ்ட் தொடர் ஆட கிளம்பியது. அப்போது டி20 அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டனாக இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு தொடர்கள் நடத்தப்பட்டது அப்போது தான்.

தயாராக வேண்டும் அதே திட்டத்தை இந்தியா இன்னும் பெரிய அளவில் இப்போது செயல்படுத்த உள்ளது. அதற்கு தனித் தனி வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணி மற்றும் ஒருநாள் – டி20 அணியை தயார் செய்ய வேண்டும். அதற்கான வேலைகள் துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு கேப்டன்கள் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்கும் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருவதால் டெஸ்ட் அணிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என கருதப்படுகிறது. அந்த அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் எனவும் தெரிகிறது.

அந்த இளம் கேப்டன் யார்? ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதால் ராகுலுக்கு கேப்டன் பதவி கிடைக்கக் கூடும். ஒருவேளை ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை என்றால் அவர் ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருப்பார்.

டெஸ்ட் அணியில் யார்? டெஸ்ட் அணியில் விராட் கோலி, புஜாரா, அஸ்வின், ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், அஜின்க்யா ரஹானே இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இவர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது ஷமி தவிர மற்றவர்கள் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள், டி20 அணியில் யார்? ஒருநாள் மற்றும் டி20 அணியில் அதிக இளம் வீரர்கள் இடம் பெறக்கூடும். கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாஹர், ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், மனிஷ் பாண்டே, ஷிகர் தவான் உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

Related posts

Leave a Comment