90 ஆயிரம் குடும்பத்திற்கு அரிசி ; முதல்வர் இ.பி.எஸ்., ஏற்பாடு

சென்னை : முதல்வர், இ.பி.எஸ்., தன் எடப்பாடி தொகுதியில், 90 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தன் சொந்த பணத்தில், தலா, 5 கிலோ அரிசி வழங்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக அரசு சார்பில், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, நிவாரண தொகை, ௧,௦௦௦ ரூபாய், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.சட்டசபை தேர்தலில், முதல்வர் வெற்றி பெற்ற, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், எடப்பாடி நகரம், ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சி பகுதிகள் உள்ளன.

இங்கு வசிக்கும், 90 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 5 கிலோ அரிசியை, தன் சொந்த செலவில், இலவசமாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வர் அறிவுரைப்படி, அ.தி.மு.க., சார்பில், மூன்று நிர்வாகிகள், முகக் கவசம் அணிந்து, அதிகாரிகளுடன், சமூக இடைவெளியை பின்பற்றி, நிவாரண உதவிகளை வழங்குகின்றனர்.

Related posts

Leave a Comment