கொரோனாவால் இந்தியாவில் தினமும் தயாராகும் 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள்.. மோடி உரை

டெல்லி: கொரோனா நெருக்கடியில் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் 2 லட்சம் என் 95 ரக மாஸ்க்குகளை தினந்தோறும் தயாரிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லி: கொரோனா நெருக்கடியில் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் 2 லட்சம் என் 95 ரக மாஸ்க்குகளை தினந்தோறும் தயாரிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கற்பனை இந்த நிலையில் 5ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்தும் இல்லை. இது மனித குலத்திற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. கொரோனா வைரஸிடம் தோல்வி அடைவதை மனிதம் எப்போதும் ஏற்காது. நாம் நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல் இவற்றை கடந்து செல்ல வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த…

Read More

பொருளாதாரத்தை மீட்டெடுக்க.. 20 லட்சம் கோடி நிதி பேக்கேஜ்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி

டெல்லி: இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். லாக்டவுன் 4.0 மாறுபட்டதாக இருக்கும் – பிரதமர் மோடி அறிவிப்பு இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கொரோனா வைரசுக்கு இந்த நாடு பலரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல் வேதனை அளிக்கிறது. உலகம் பாதிப்பு ஒரு வைரஸ் உலத்தில் பெரும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இது நிச்சயமாக மனிதகுலத்திற்கு…

Read More

செவிலியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் கோரிக்கை

புதுடில்லி: கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர் சங்கங்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தின. கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது மருத்துவப் பணியாற்றும் செவிலியர்களுக்கு பிபிஇ.,க்கள் வழங்க மருத்துவ சங்கங்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பல மருத்துவர்கள், செவிலியர்கள் கைகழுவ சோப், தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் சில நாட்டு அரசுகள் தவித்து வருகின்றன. இன்டர்னேஷனல் ரெட் கிராஸ் அண்ட் ரெட் கிரசண்ட் மூவ்மெண்ட் (ஐசிஆர்சி) மற்றும் சர்வதேச செவிலியர் சங்கம் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு உரிய…

Read More

தமிழக அரசு உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையாக, மேலும் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/ தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் சம்பளமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், காது குத்துபவர்/ஆசாரி, நாமவளி, மிராசு, கணக்கு, கங்காணி திருவிளக்கு முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர் போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே ரூ.1,000 ரொக்கம் நிவாரணமாக வழங்கப்பட்டுவிட்டது.ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு…

Read More

ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை!

சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள மருத்துவ பழகுனர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில், 10-வது முடித்து பி.எஸ்சி நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை மொத்த காலிப் பணியிடங்கள் : 14 பணி : மருத்துவ பழகுனர் வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery), M.D துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : https://icf.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்…

Read More

அன்டர் 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து

டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஃபிபா அறிவித்துள்ளது. இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை கொரோனா காரணமாக ஃபிபா ஒத்திவைத்திருந்தது. முன்னதாக இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு கொண்டு சென்று விட்டது ஃபிபா. ஏற்கனவே உள்ள விதிமுறைகள் தொடரும் எனவும் அதில் மாற்றமில்லை என்றும் ஃபிபா கூறியுள்ளது. 2003ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு அல்லது 2005ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் பிறந்த வீராங்கனைகள் இதில் விளையாடத் தகுதி பெற்றவர்கள் ஆவர். 2021க்கு ஒத்திவைப்பு இதுகுறித்து ஃபிபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனாவைரஸ் தாக்கம்…

Read More

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம்..? யாரை கேட்டு முடிவு எடுத்தீர்..? மு.க.ஸ்டாலின்

சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம் வந்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன் பங்குக்குக் குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமல்ல என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் அறிவிப்பு ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ – மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும். யாரை கேட்டீர்கள்? மக்களின் மனநிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து…

Read More

என்ன மனுஷி இவர்.. கமலாத்தாள் பாட்டியைப் பார்த்து மெய் சிலிர்த்த கைஃப்

மும்பை: தமிழகத்தில் ரொம்பப் பிரபலமான கமலாத்தாள் பாட்டியைப் பார்த்து மெய் சிலிர்த்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப். தமிழகத்தின் கமலாத்தாள் பாட்டியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இட்லி என்றதும் நம்மாட்களுக்கு முன்பு குஷ்புதான் நினைவுக்கு வருவார். அதை மாற்றி கமலாத்தாள் பெயரை நினைவுக்கு வர வைத்ததே பெரிய சாதனைதான். வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து பல்லாயிரம் இதயங்களை மகிழ்வித்து வருபவர்தான் நம்ம கமலாத்தாள் பாட்டி. இதை இன்று நேற்று அவர் செய்யவில்லை. கடந்த 30 வருடமாக செய்து வருகிறார். கோவை கமலாத்தாள் பாட்டி கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையம்தான் கமலாத்தாள் பாட்டியின் கிராமம். கடந்த 30 வருடத்திற்கும் மேலாக அவர் ஒரு இட்லியை ஒரு ரூபாய் மட்டுமே விலை வைத்து விற்று வருகிறார். இதனால் பலரின் மனதை கொள்ளை கொண்டவர் கமலாத்தாள் பாட்டி. இப்போது…

Read More

Rajapalayam Thangapandiyan Mla

இராஜபாளையம் தொகுதியில் பேண்ட் செட் இசை கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவினால் தொழில் ஏதும் செய்யாமல் மிகவும் சிரமப்படுவதாக MLA அவர்களை நேரில் சந்தித்து கூறியதை அடுத்து நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் 102 பேண்ட் செட் இசைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி தேங்காய் காய்கறிகள் அடங்கிய பைகளை இன்று 12.05.2020 வழங்கினார். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட இசைக் கலைஞர்கள் குடும்பத்துடன் MLA அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர் அதற்கு MLA அவர்கள் தாங்கள் அனைவரும் எப்போதும் திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. மேலும் இராஜபாளையம் தொகுதியில் இதுவரை 6658 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் நகர துணை செயலாளர்…

Read More

#OndrinaivomVaa Sattur Dmk News

அருமை தளபதி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, நமது அண்ணன் மாண்புமிகு நமது அமைச்சர் KKSSRR அவர்களின் அறிவுரையின் படி, கழக சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னோடி அண்ணன் S.V.சீனிவாசன், சாத்தூர் ஒன்றிய சேர்மன் திருமதி. நிர்மலா கடற்கரைராஜ்‌ ஆகியோரின் வழிகாட்டலில், இன்று அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நமது ஒன்றிய செயலாளர் அண்ணன் முருகேசன், தி.மு.க. முன்னாள் மாவட்ட சேர்மன் அண்ணன் கடற்கரைராஜ், தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திரு. து.முனீஸ்வரன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சரண்யா ஆகியோர் பொதுமக்களுக்கு இன்று உணவு வழங்கினார்கள்.. இந்நிகழ்வில் தி.மு.க. அணைக்கரைப்பட்டி கிளை அவைத்தலைவர் வழக்கறிஞர் D.வெள்ளையராஜா, கழக பிரமுகர் திரு.கந்தசாமி, வார்டு உறுப்பினரும் கிளை மகளிரணி திருமதி. மகேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.. இவண், Er. மு.பிரவீன் குமார் M.E. கத்தாளம்பட்டி ஊராட்சி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர். …

Read More