என்ன மனுஷி இவர்.. கமலாத்தாள் பாட்டியைப் பார்த்து மெய் சிலிர்த்த கைஃப்

மும்பை: தமிழகத்தில் ரொம்பப் பிரபலமான கமலாத்தாள் பாட்டியைப் பார்த்து மெய் சிலிர்த்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப். தமிழகத்தின் கமலாத்தாள் பாட்டியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இட்லி என்றதும் நம்மாட்களுக்கு முன்பு குஷ்புதான் நினைவுக்கு வருவார். அதை மாற்றி கமலாத்தாள் பெயரை நினைவுக்கு வர வைத்ததே பெரிய சாதனைதான். வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து பல்லாயிரம் இதயங்களை மகிழ்வித்து வருபவர்தான் நம்ம கமலாத்தாள் பாட்டி. இதை இன்று நேற்று அவர் செய்யவில்லை. கடந்த 30 வருடமாக செய்து வருகிறார்.

கோவை கமலாத்தாள் பாட்டி கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையம்தான் கமலாத்தாள் பாட்டியின் கிராமம். கடந்த 30 வருடத்திற்கும் மேலாக அவர் ஒரு இட்லியை ஒரு ரூபாய் மட்டுமே விலை வைத்து விற்று வருகிறார். இதனால் பலரின் மனதை கொள்ளை கொண்டவர் கமலாத்தாள் பாட்டி. இப்போது வரை அவர் விலையை உயர்த்தவில்லை. இதற்கு அவர் சொல்லும் காரணம்தான் மனதைத் தொடுகிறது.

வயிறு நிறையணும் எனக்கு பணம் முக்கியமில்லை. எல்லோருடைய வயிறும் நிறைய வேண்டும். யாருடைய வயிறும் காய்ந்திருக்கக் கூடாது. எனவேதான் விலையை உயர்த்தாமல் இருக்கிறேன் என்று கூறுகிறார் கமலாத்தாள் பாட்டி. எந்த இடர் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தினசரி அடுப்பைப் பற்ற வைத்து விடுகிறார் கமலாத்தாள் பாட்டி. இது பாராட்டுக்குரியது.

தொழிலாளர்கள் இவரிடம் இடம் பெயர்ந்து வேலை பார்த்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்கள் பலரும் கமலாத்தாள் பாட்டியின் புண்ணியத்தால் வயிறார சாப்பிட்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்திலும் கூட விடாமல் அவரது வீட்டு அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. பலருடைய பசியை ஆற்றி வருகிறது. இது தற்போது கிரிக்கெட் வீரர் முகம்மது கையிபின் பாராட்டையும் வாழ்த்தையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளது.

முகம்மது கைஃப் பாராட்டு இதுதொடர்பாக முகம்மது கைஃப் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 85 வயதான தமிழகத்தைச் சேர்ந்த கே. கமலாத்தாள் ஜி கடந்த 30 வருடமாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இந்த லாக்டவுன் சமயத்திலும் கூட நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் அவர் இட்லி விற்கிறார். பல இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் பசியாற்ற வேண்டும் என்று காரணம் சொல்கிறார். அவரது தன்னலமற்ற சேவை அனைவருக்கும் ஊக்கம் தருகிறது என்று கூறியுள்ளார் கைஃப்.

Related posts

Leave a Comment