கொரோனாவால் இந்தியாவில் தினமும் தயாராகும் 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள்.. மோடி உரை

டெல்லி: கொரோனா நெருக்கடியில் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் 2 லட்சம் என் 95 ரக மாஸ்க்குகளை தினந்தோறும் தயாரிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லி: கொரோனா நெருக்கடியில் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் 2 லட்சம் என் 95 ரக மாஸ்க்குகளை தினந்தோறும் தயாரிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கற்பனை இந்த நிலையில் 5ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்தும் இல்லை. இது மனித குலத்திற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது.

கொரோனா வைரஸிடம் தோல்வி அடைவதை மனிதம் எப்போதும் ஏற்காது. நாம் நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல் இவற்றை கடந்து செல்ல வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸால் 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அது போல் இந்தியாவில் தங்கள் அன்புக்குரியவர்களை கொரோனாவால் மக்கள் இழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் 95 மாஸ்க் இன்று உலகமே நெருக்கடியான நிலையில் உள்ளது. இதில் இருந்து நாம் மீள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொரோனா நெருக்கடி இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் கூட இந்தியாவில் தயார் செய்யப்படவில்லை. சில எண்ணிக்கையிலான என் 95 மாஸ்க்கள் மட்டுமே நம்மிடம் இருப்பு இருந்தன.

2 லட்சம் மாஸ்க்கள் ஆனால் இன்று 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும் 2 லட்சம் என் 95 முகக் கவசங்களையும் நாம் தினந்தோறும் இந்தியாவில் தயார் செய்து வருகிறோம். உலகமே வாழ்வா சாவா என போராடிய போது இந்தியாவின் மருந்துகள்தான் புதிய நம்பிக்கையை கொடுத்தது. இதனால் இன்று உலகம் முழுவதும் இந்தியா பாராட்டப்படுகிறது என்றார் மோடி.

Related posts

Leave a Comment