செவிலியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் கோரிக்கை

புதுடில்லி: கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர் சங்கங்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தின. கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது மருத்துவப் பணியாற்றும் செவிலியர்களுக்கு பிபிஇ.,க்கள் வழங்க மருத்துவ சங்கங்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பல மருத்துவர்கள், செவிலியர்கள் கைகழுவ சோப், தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் சில நாட்டு அரசுகள் தவித்து வருகின்றன. இன்டர்னேஷனல் ரெட் கிராஸ் அண்ட் ரெட் கிரசண்ட் மூவ்மெண்ட் (ஐசிஆர்சி) மற்றும் சர்வதேச செவிலியர் சங்கம் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க செவிலியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

Leave a Comment