நான் 17 வயசுல இருந்தபோது என் மூஞ்சிலே குத்திடுவேன்னு ஆஸ்திரேலிய வீரர் சொன்னாரு – பார்த்திவ் பட்டேல் பகிர்வு

இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது 17 வயதில் அறிமுகமானவர் பார்த்திவ் படேல். அந்த காலகட்டத்தில் இந்திய அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்து வந்தது. அந்த நேரத்தில்தான் 17 வயதில் மிகவும் இளம் வீரரான பார்த்தீவ் பட்டேல் களமிறக்கப்பட்டார். அப்போது அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார்.

இந்நிலையில் தான் முதன்முதலில் ஆடிய போட்டியின் போது நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து தற்போது தெரிவித்துள்ளார் பார்த்திவ் படேல். இது குறித்து அவர் கூறுகையில் : 2004 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டியின்போது அபாரமாக ஆடிய மேத்யூ ஹைடன் சதம் அடித்திருந்தார். இர்பான் பதான் மேத்யூ ஹைடன் விக்கெட்டை ஒரு கட்டத்தில் வீழ்த்தினார். அதனால் நான் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்த மேத்யூ ஹைடன் என்னை கடந்து செல்லும்போது ‘ஹாஹா’ என்று கிண்டல் செய்தேன்.

இதனால் என் மீது கடுப்பாகிவிட்டார் ஹைடன். பின்னர் நான் மீண்டும் உள்ளே வரும் வரை காத்து இருந்தார் அவர். வீரர்கள் அறைக்கு முன்னால் நின்று கொண்டு மீண்டும் இதே போல் செய்தால் ‘முகத்தில் குத்து விட்டுவிடுவேன் சின்ன பையா’ என்று கூறினார். அப்போது நான் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினோம். – Advertisement – அப்போது இருவரும் நண்பர்களாகி விட்டோம் என்று கூறியுள்ளார். பர்திவ் படேல் 2002 ஆம் ஆண்டு தனது 17 வயதில் அறிமுகமானாலும். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் மகேந்திர சிங் தோனி ஆகிய அபாரமான வீரர்களின் காரணமாக இந்திய அணியில் இருந்த இடத்தை தக்கவைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே தனது வாய்ப்பினை பெற்ற பார்திவ் படேல் அவ்வப்போது இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் தோனியின் வருகையால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. இந்திய அணிக்காக 2002 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 25 டெஸ்ட் போட்டிகள், 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் தற்போது குஜராத் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். சமீபத்தில்தான் இவர் ஒன்பது விரல்களுடன் கீப்பிங் செய்தார் என்ற தகவல்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அது குறித்த புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரல் ஆனது. மேலும் தற்போதைய தனது இளம் வயது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது கமெண்டுகளை சமூகவலைத்தளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment