Rajapalayam Thangapandiyan Mla

இராஜபாளையம் தொகுதியில் பேண்ட் செட் இசை கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவினால் தொழில் ஏதும் செய்யாமல் மிகவும் சிரமப்படுவதாக MLA அவர்களை நேரில் சந்தித்து கூறியதை அடுத்து நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் 102 பேண்ட் செட் இசைக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு அரிசி தேங்காய் காய்கறிகள் அடங்கிய பைகளை இன்று 12.05.2020 வழங்கினார். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட இசைக் கலைஞர்கள் குடும்பத்துடன் MLA அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர் அதற்கு MLA அவர்கள் தாங்கள் அனைவரும் எப்போதும் திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. மேலும் இராஜபாளையம் தொகுதியில் இதுவரை 6658 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் நகர துணை செயலாளர் சரவணன் பேரூர் செயலாளர் இளங்கோவன் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் மணல் செந்தில் கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment