ஜூன் 1ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும்

சென்னை: ஜூன் 1ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுவிட்டது.

எனினும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டது. 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அரசோ அனைத்திற்கும் 10ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் நிச்சயம் தேர்வு நடத்தப்படும் என்றது. இந்த நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு 12-ஆம் தேதி முடியும் என தெரிவித்துள்ளார். மார்ச் 24-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு

ஜூன் 4-இல் தேர்வு நடத்தப்படும். 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 இல் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜூன் 1- மொழிப்பாடம் ஜூன் 3- ஆங்கிலம் ஜூன் 5- கணிதம் ஜூன் 6- விருப்பப் பாடம் ஜூன் 8- அறிவியல் ஜூன் 10- சமூக அறிவியல் ஜூன் 12- தொழிற்கல்வி (வொகேஷனல்)


Related posts

Leave a Comment