அன்டர் 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து

டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஃபிபா அறிவித்துள்ளது. இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை கொரோனா காரணமாக ஃபிபா ஒத்திவைத்திருந்தது. முன்னதாக இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு கொண்டு சென்று விட்டது ஃபிபா. ஏற்கனவே உள்ள விதிமுறைகள் தொடரும் எனவும் அதில் மாற்றமில்லை என்றும் ஃபிபா கூறியுள்ளது. 2003ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு அல்லது 2005ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் பிறந்த வீராங்கனைகள் இதில் விளையாடத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

2021க்கு ஒத்திவைப்பு இதுகுறித்து ஃபிபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனாவைரஸ் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையிலும் போட்டிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தேதியில் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து நிலைமை கண்காணித்து வரப்படும் என்று ஃபிபா கூறியுள்ளது.

16 அணிகள் இந்த போட்டித் தொடர் மொத்தம் 5 இடங்களில் நடைபெறும். 16 அணிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிப் போடப்பட்டுள்ளனன. அந்த வகையில் இந்தியாவிலும் எந்த விளையாட்டுப் போட்டியும் நடைபெறவில்லை.

ஐபிஎல்லே நடக்கலை இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டுக்குத்தான் நிறைய ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்க பிசிசிஐ ஆண்டு தோறும் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இந்த முறை நடத்தமுடியாமல் காலவரையன்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. லாக்டவுன் தொடர்ந்து கொண்டிருப்பதால் போட்டியை வேறு இடத்தில் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது

கொரோனா போனால் நல்லது இந்த நிலையில்தான் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கால்பந்துப் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறும் என்ற இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்குள் கொரோனா பிரச்சினை தீராது என்று ஃபிபா கணித்துள்ளதா என்று தெரியவில்லை. ஒரு வேளை ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கடைசியில் நடக்கக் கூட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுவதால் முன்னெச்சரிக்கையாக அடுத்த ஆண்டுக்கு போட்டி ஒத்திப் போயிருப்பதாகவும் கருதப்படுகிறது.

Related posts

Leave a Comment