தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தையே இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் 380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் கடந்த 8 நாளைக்கு பிறகு இன்றைக்கு தான் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இன்றைக்கு 509 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகம் தமிழகத்தில் வழக்கம் போல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டில் 25 பேர், திருவள்ளூரில் 25 பேர், திருவண்ணாமலையில் 23 பேர், கடலூரில் 17 பேர், விழுப்புரத்தில் 7 பேர், தேனியில் 5 பேர், திருநெல்வேலியில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு பேர் தமிழகத்தில் புதன்கிழமையான இன்று மட்டும் 42 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2176 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 6984 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 4470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக அதிகமான சோதனை மே 13ம் தேதியான இன்று மட்டும் 12780 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 279467 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 12666 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,68,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது

64 பேர் இதுவரை மரணம் தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 489 வயது ஆண், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 41 வயது ஆண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 43 வயது ஆண் ஆகிய மூன்று பேர் இறந்துள்னர் தன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்கள் அனைவரும் சுவாச பிரச்சனையால் உயிரிழந்துள்ளனர்.

எத்தனை பெண்கள் பாதிப்பு தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 509 பேரில் 288 பேர் ஆண்கள், 221 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 9227 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6136 பேர் ஆண்கள், 3088 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கைகள் ஆவர். மே 13ம் தேதி நிலவரப்படி 4623 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 6984 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related posts

Leave a Comment