காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ.. காமெடி நடிகர் சூரி புகழாரம்

சென்னை : காவல்துறையினர் தான் உண்மையான ஹீரோக்கள் என்று நகைச்சுவை நடிகர் சூரி தெரிவித்தார். தற்பொழுது கொரோனா நோய் தொற்று காரணமாக நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே எனினும் பலர் தேவையற்று வெளியில் சுற்றுவதை ஆங்காங்கு பார்க்க முடிகிறது இதையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதத்தில் காவல்துறையுடன் இணைந்து சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டிகர்கள் சமீபத்தில் நடிகர் சசிகுமார் மதுரையில் ஒரு நாள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அதேபோல் சென்னையிலும் நடிகர் மைம் கோபி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசி வந்தார். அதேபோல் நகைச்சுவை நடிகர்களும் இவ்வாறு பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் பிரச்சாரம் செய்து வந்தனர். வெண்ணிலா கபடிகுழு படம் மூலமாக பரோட்டா சூரி என்று நமக்கு அறிமுகமான நடிகர் சூரி அந்த திரைப்படத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமாகி தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார். இதற்கு அவருடைய உழைப்பு மிகப்பெரிய காரணமாகும்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு அண்மைக்காலமாக நடிப்பிலிருந்து சற்று விலகி ஓய்வெடுத்து வருகிறார் இதனால் சூரிக்கு மார்க்கெட் பெரிதாகிவிட்டது. காமெடி நடிகராக இருந்தாலும் சமீபத்தில் அவர் நடத்திய ஒரு போட்டோ சூட்டை பார்த்து திரையுலகமே அசந்து போனது அதற்கு காரணம் ஹீரோக்களுக்கு இணையாக அவர் வைத்திருந்த சிக்ஸ்பேக் தான். கதாநாயகனாக நடிக்கும் படத்திற்காக அவர் அதை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப காலத்தில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துவந்த சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வந்த பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டார் தன் பெயரை பரோட்டா சூரி என்று திரைப்படங்களில் போட சம்மதித்தார். இந்த கொரோனா வைரஸ் காலத்தில் அவர் பல இணைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார் முக்கியமாக டிக்டாக்கில் தன் குழந்தைகளுடன் அவர் அடிக்கும் லூட்டிகளை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். மேலும் ஒருமுறை காவல்துறையினருக்கு நாம் அனைவரும் மிகுந்த நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமக்காக சேவை செய்து வருகிறார்கள் என்றும் சூரி குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள d1 காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருக்கும் காவலர்களுக்கு நன்றி கூறினார். கொரோனா நோயில் இருந்து மக்களை காத்து வருவதாக தெரிவித்தார். காவல்துறையினர், நோய் தடுப்பு பணியில் சிறந்த சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தான் சிறந்த ஹீரோக்கள் என்று புகழ்ந்தார். மேலும், அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார். இந்த நாள் என் வாழ்நாளில் மிகவும் முக்கியமானது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related posts

Leave a Comment