கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல.. ஆய்வகத்திலிருந்து பரவியது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

டெல்லி: கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் துறைக்கு உதவும் வகையில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பி.எம்

கொரோனாவுடன் வாழ “கொரோனா வைரஸ் உடன் வாழும் கலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது ஒரு செயற்கை முறையில் ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பாதித்துள்ளது. இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சி செய்கிறார்கள். இதுவரை தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பின்னர் எந்த பிரச்சனையும் இருக்காது.

கொரோனா பாதிப்பு இதில் அடுத்த பிரச்னை என்னவென்றால் கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்திருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பது. சிலருக்கு அறிகுறியே இல்லாமல் பாதிக்கிறது. எனவே கொரோனா பாதிப்பை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இது இயற்கை வரைஸ் அல்ல. ஆய்வகத்திலிருந்து பரப்பப்பட்டது. இதனை உலகமும், இந்தியாவும் எதிர்கொள்வதற்கு தயாராகி விட்டன. அறிவியலாளர்களும் தயாராகியுள்ளார்கள்.

பொது முடக்கம் கொரோனாவை எதிர்த்து போர் செய்யும் அதே நேரத்தில் நாம், பொருளாதார பிரச்னைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்திய ஏழ்மை நாடு. நம்மால் மாதக்கணக்கில் பொது முடக்கத்தை நீட்டிக்க முடியாது” என்றார். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்திற்கும் பொறுப்பான அமைச்சரா கட்கரி, பொதுமுடக்த்தால் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறினர்கள் எனறும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படும் போது அவர்கள் திரும்பி வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பசியுடன் நடந்தனர் மார்ச் மாத இறுதியில் நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வேலைகள் அல்லது வீடுகள் இல்லாமல் வெளியேறினர், தங்கள் கிராமங்களுக்கு கால்நடையாகவோ, வாகனங்கள் மூலமோ அல்லது லாரிகளிலோ புறப்பட்டனர். அப்படி சென்றவர்களில் பலர் சோர்வு மற்றும் பசி அல்லது நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தங்கள் உயிரை இழந்தனர்.

பொருளாதார திட்டம் இந்நிலையில் வைரஸ் நெருக்கடி குறித்து பல்வேறு துறைகள் பயன்பெறும் வகையில் செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ .20 லட்சம் கோடி பொருளதாரா பேக்கேஜ் அறிவித்திருந்தார். அதன் விவரங்களை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதன்படி சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட உள்ளது. கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம்தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.. வட்டிக்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது.. இந்த கடனுக்கு பிணை தேவையில்லை. இதனால் 45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள். ரூ. 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ. 25 கோடி வரை கடன் இருந்தால் அந்த நிறுவனத்திற்கு கூடுதல் கடன் வழங்கப்படும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment