Manickam Tagore Virudhunagar M.P

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் டி.புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலையை ஆய்வு செய்தார்.
மத்திய அரசு 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக மாற்றப்பட வேண்டும். மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் மிகவும் இந்த கொரானா வைரஸ் தடை உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

100 நாள் வேலை சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா? வேலை முறையாக வழங்கப்படுகிறதா? எத்தனை பேருக்கு வேலை வழங்கப்படுகிறது? மொத்தம் எத்தனை நபர்களுக்கு இந்த ஊராட்சியில் அட்டைதாரர்கள் உள்ளார்கள்? என்று பல்வேறு குறைகளை வேலை பார்க்கின்ற மக்களிடம் கேட்டறிந்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த 100 நாள் வேலை சம்பளம் ரூ.203 மாற்றப்பட்டுள்ளது என்று சொல்கிறார் ஆனால் இந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் கேட்டறிந்தார் ரூபாய் 151 ரூபாய் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். மத்திய மோடி அரசு அறிவித்த 100 நாள் வேலைக்கு சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும்.

மேலும் வேலை பார்க்கும் பெண்களிடம் இத்திட்டத்தை யார் கொண்டு வந்தது? பொதுமக்களும் காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்கள் மேலும் இத்திட்டத்தை பற்றி விளக்கிக் கூறினார்.
அதாவது இத்திட்டமானது 2007 2008 ஆம் ஆண்டு அன்னை சோனியா காந்தி அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக கிராமத்தின் வளர்ச்சியை உருவாக்குவதற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். பிறகு அதை திட்டம் இல்லாமல் சட்டமாக்கப்பட்டது. இந்த 100 நாள் வேலையை யாரும் நிறுத்த முடியாது என்று மக்களிடம் எடுத்துக் கூறினார்.டி.புதுப்பட்டி இந்த
கிராமத்தில் வேலைப் பணியாளர்களை தொடர்ந்து அதிகப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வலியுறுத்தினார்.

மேலும் அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள்.

விருதுநகர் எம்.பி அவர்கள் 100 நாள் வேலை பார்க்கும் சம்பளம் எவ்வளவு வாங்குகிறார்களோ அதை சம்பளம் பெற்று வருவதற்கு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். என்று தூய்மைப் பணியாளர்கள் கூறினார்.
டி.புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் மக்களிடம் மதிய உணவு பிரியாணி வழங்கி அவர்களுடன் சேர்ந்து உணவு வழங்கி சாப்பிட்டார்.

உடன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் சுப்பிரமணியன் ராஜ்குமார் சரவணபகவான் காங்கிரஸ் RTI-wing மாநில இணைச்செயலாளர் ஜெராடு சத்யன் சிவன் வட்டார தலைவர் தலைவர் முருகேசன் வார்டுதலைவர் சீனிவாசன் முனியசாமி பொன் மகாலிங்கம்,கிராம கமிட்டி ராஜேந்திரன், மணிகண்டன், முத்துப்பாண்டி மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன் உலகநாதன் சௌந்தரபாண்டியன் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment