இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.7549 கோடி ஒதுக்கியது உலக வங்கி

வாஷிங்டன்:
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் சுயசார்பு இந்தியா என்ற பெயரில் சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு உதவும் வகையில் உலக வங்கி 7549 கோடி ரூபாய் (1 பில்லியன் டாலர்) ஒதுக்கி உள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக இந்த நிதியை ஒதுக்கியிருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.

Related posts

Leave a Comment