எனது 12 பந்தில் 50 ரன்கள் சாதனையை இந்த இந்தியவீரர் முறியடிப்பார் – யுவராஜ் சிங் கணிப்பு! அது ரோகித், கோஹ்லி இல்லை!

எனது 12 பந்தில் 50 ரன்கள் சாதனையை இந்த இந்தியவீரர் முறியடிப்பார் – யுவராஜ் சிங் கணிப்பு! அது ரோகித், கோஹ்லி இல்லை!

எனது 12 பந்தில் 50 என்ற பல ஆண்டு சாதனையை இந்திய அணியில் இவர் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கணித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்–ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2007ல் டர்பனில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி–20 உலக கோப்பை லீக் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி 12 பந்தில் அரைசதமடித்தார். இதன்மூலம் சர்வதேச டி–20 அரங்கில் அதிவேக அரைசதமடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இச்சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த சாதனை குறித்து யுவராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “சர்வதேச டி–20 அரங்கில் எனது அதிவேக அரைசத சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டுமே உள்ளது. சிறந்த ஆல்–ரவுண்டரான இவரை, அணியில் வழிநடத்த யாராவது இருக்க வேண்டும்.

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியை நான் நீண்டகாலமாக நேசிக்கிறேன். ஆனால் அந்த அணி நிர்வாகத்திற்கும் எனக்கும் ஒத்துவரவில்லை. காரணம் தெரியவில்லை. ஆதலால் அங்கிருந்து விலக முடிவு செய்தேன். அந்த அணியில் இருந்து வெளியேறிய போது, நான் அவர்களிடம் கேட்டிருந்த அனைத்து வீரர்களையும் ஏலத்தில் வாங்கினார்கள்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு அதிர்ச்சி அளித்தது. ஐந்து ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிய வீரரை மிடில் ஆர்டரில் களமிறக்கியது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2014ல் இலங்கைக்கு எதிரான டி–20 உலக கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இப்போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால் இலங்கை பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். இப்போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்களும் தடுமாறினர். ஆனால் ரசிகர்கள் மற்றும் மீடியா என்னை மட்டும் குரிப்பிட்டு தாக்கிப்பேசினர். அப்போது ரசிகர்கள் சிலர், சண்டிகரில் உள்ள எனது வீட்டில் கல்வீசி தாக்குதலும் நடத்தினர். வீட்டிற்கு வந்த போது, நான் 6 பந்தில் 6 சிக்சர் விளாசிய பேட் மற்றும் தொப்பியை பார்த்தேன். அப்போது என் நேரம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.” என மனம்திறந்து பேசினார்.

Related posts

Leave a Comment