பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை இரண்டு மடங்கு லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். 
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment