#OndrinaivomVaa Rajapalayam News

திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின் ஆணைப்படி மாவட்ட செயலாளர்கள் KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தங்கம் தென்னரசு MLA அவர்கள் ஆலோசனையின்படி இராஜபாளையம் தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 325 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு சேத்தூர் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் வைத்து நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் அரிசி தேங்காய் காய்கறிகள் அடங்கிய பைகளை இன்று 15.05.2020 வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் தலைவர் கலைஞர் அவர்கள் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார் அதுபோல் திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் கேரளா மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகையாக 3000 ரூபாய் வழங்கப்படுகிறது அதுபோல் தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக 4000 வழங்குவார் எனவும் அரசு வேலைவாய்ப்பில் இவர்களுக்கென கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார். மேலும் நிவாரண பொருள்கள் வாங்க வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேத்தூர் பேரூராட்சியில் உள்ள கல்லணத்தாய் கணேசன் என்பவருக்கும் தெற்கு தேவதானம் ஊராட்சியில் உள்ள ஜெயகுமாரி என்பவருக்கும் MLA அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண பொருள்கள் வழங்கி அந்தந்த கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த கிராமங்களில் உள்ள அவரவர் வீட்டிற்கே சென்று நிவாரணம் வழங்கினார். இதுவரையில் இராஜபாளையம் தொகுதியில் 6983 பயனாளிகளுக்கு கொரோனை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் துணை சேர்மன் துரைகற்பகராஜ் பேரூர் கழக செயலாளர்கள் சிங்கப்புலி அண்ணாவி இளங்கோவன் கவுன்சிலர்கள் பூமாரி மாரிமுத்து வள்ளிமயில்ராஜா ஏசம்மாள் அரிராம்சேட் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment