Rajapalayam News

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள இராஜபாளையம் அய்யனார் கோவில் மலைவாழ் மக்கள் 35 குடும்பத்தினருக்கு தலா 10கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், பல சரக்கு, பனங்கற்கண்டு, மாஸ்க் ஆகியவை , இந்திய மருத்துவச் சங்கம்- இராஜபாளையம் கிளை சார்பில் இன்று(16-05-2020) காலை 07-00மணியளவில் வழங்கப்பட்டன.
டாக்டர்.சாந்திலால் தன் மனைவியின் பிறந்தநாள் நினைவாக 35 குடும்பத்தலைவிகளுக்கும் , தலா ஒரு சேலை வீதம் 35 சேலைகள் வழங்கினார். இந்நிகழ்வு டாக்டர் கோதண்டராமன், டாக்டர் சாந்திலால், டாக்டர் குணசேகரன், டாக்டர் ராஜாராம், டாக்டர் ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பகிர்வு அறக்கட்டளை சார்பில் செல்வக்குமார், சரவணன்,கண்மணிராசா, கருப்பட்டி கணேசன் கலந்துகொண்டு நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். பயனாளிகள் முகத்தை மறைப்பது நமது வழக்கம், மலைவாழ் மக்களின் தலைவர் ராமராஜ் வேண்டுகோளுக்கிணங்க முகத்தை மறைக்காமல் பதிவிட்டுள்ளோம்.

Related posts

Leave a Comment