Thangam Thenarasu MLA

தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருவான ஒவ்வொரு திட்டத்திலும் அவரது கைவண்ணம் இருக்கும்.

பூம்புகார்- வள்ளுவர் கோட்டம்- திருவள்ளுவர் சிலை- அண்ணா அறிவாலயம்…என இந்தப் பட்டியல் நீளும்.

அண்ணா நூற்றாண்டு நூலகமும் அதற்கு விதிவிலக்கல்ல!

பேரறிஞர் அண்ணா அவர்கள் எவ்வாறு அமர்ந்து படிப்பார்; நூலக வாயிலில் அமையவேண்டிய அவரது திருவுருவச் சிலை எவ்வகையில் அமையப்பெற வேண்டும், என்பதை எல்லாம் ஒரு நாள் விளக்கி எனக்குப் ‘பாடம்’ நடத்தினார்.

அதுமட்டுமல்ல; அண்ணா நூற்றாண்டு நூலகம் ,மற்ற கட்டடங்கள் போலல்லாமல் கட்டட அமைப்பிலும், தொழில் நுட்ப ரீதியிலும், சுற்றுச் சூழலுக்கு இயைந்த வகையில் அமையப் பெற வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்.

ஒரு நாள் என்னை அழைத்து, புதிய தலைமைச் செயலகம் போல நூலகமும் ‘பசுமைக் கட்டடம் ( Green Building)’ என்ற தரத்தில் அமையப் பெற வேண்டும் என்று தெரிவித்ததோடு, அதன் வாயிலாகக் கிடைக்கும் பலன்களையும், சூழலியல் அடிப்படையிலேயே இது போன்ற பெரும் கட்டட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார்.

அவரது எண்ணப்படியே, நூலகத்தின் வடிவமைப்பு மட்டுமல்ல; ‘ கார்ப்பெட்டில் இருந்து கழிவறை வரை’ பசுமைக்கட்டட நிபந்தனைகளை நிறைவு செய்யக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அந்த நூலகம் கட்டப்பட்டது.

அதன் விளைவாக அண்ணா நூற்றாண்டு நூலகம் பசுமைக் கட்டடத்திற்கானத் “ தங்கச் சான்றிதழ்” பெற்றது பெருமைக்குரியது.

அந்தச் செய்தியைத் தலைவரிடம் போய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். கழக முன்னணியினரோடு பேசிக் கொண்டு இருந்தார் . விவரத்தைச் சொன்னதும் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் திரும்பினார்.

“ வேறொண்ணுமில்லை. தங்கம் வாங்கி இருக்கிற விஷயத்தை தங்கமே வந்து சொல்றாரு”😃

Related posts

Leave a Comment