பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டல பிரிப்பு.. மாநிலங்களே இனி முடிவெடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி!

சென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

லாக்டவுன் பிளான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் மாநில அரசுகள் லாக்டவுன் குறித்த எக்சிட் பிளானை அளித்தது. தங்கள் மாநிலங்களில் எப்படி லாக்டவுனை தளர்த்தலாம், தடைகளை எதற்கெல்லாம் நீட்டிக்கலாம் என்று திட்டம் வகுத்து மத்திய அரசிடம் அளித்தது. அதில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக பிரிக்கும் அதிகாரத்தை சில முதல்வர்கள் கோரிக்கையாக வைத்து இருந்தனர்.

மண்டலம் பிரிப்பு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசுதான் மண்டலங்களாக பிரித்தது. அதாவது மத்திய அரசுதான் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களாக பிரித்துள்ளது. ஆனால் இப்போது மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களாக பிரிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கண்டெயின்மெண்ட் சோன்கள் எப்படி அதேபோல் கண்டெயின்மெண்ட் சோன்கள் எவை என்பது குறித்தும் மாநில அரசுகளுக்கே முடிவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் இனிமேல் மாநிலங்கள் இதில் முடிவுகளை எடுக்கலாம் என்பதால் மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் வந்துள்ளது. இதனால் ஒரு பகுதியை கிரீன் பகுதியாக அறிவிக்க மாநில அரசு விரும்பினால், தாராளமாக அறிவிக்கலாம். மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.

பச்சை மண்டலம் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்கள் தொடங்கி பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் இந்த பகுதிகளை தமிழக அரசு பச்சை மண்டலங்களாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தமிழகத்தில் இதனால் பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேபோல் இந்த பச்சை மண்டலங்களில் நிறைய தளர்வுகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Related posts

Leave a Comment