கர்நாடகா:தமிழர்கள் நுழைய எடியூரப்பா தடை

பெங்களூரு:கர்நாடகாவில் நுழைவதற்கு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு மாநில மக்களுக்கு தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடியூரப்பா 4-ம் கட்ட ஊரடங்கின் போது எந்ததெந்த துறைகளுக்கு அனுமதி என்பது குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது: மாநிலத்தில் நாளை முதல் தனியார் அரசு பஸ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்து துவங்கப்படும். குஜராத், மகாராஷ்டிரம், கேரளா தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் மேற்கண்ட மாநில மக்கள் கர்நாடகாவிற்குள் நுழைய வரும் 31ம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் தியேட்டர்கள், மால்கள் தவிர அனைத்து வணிக வளாகங்கள் திறக்கப்படும் .மாநிலத்தில் பூங்காக்கள் காலை 7-9 மணி வரையிலும் மாலை 5-7 மணி வரையிலும் திறக்கப்படும். மாநிலத்தில் ஆட்டோவில் டிரைவர் தவிர இரண்டு பேரும் கார்களில்…

Read More

சிறப்பு ரயில்கள் மூலம் ரயில்வேக்கு ரூ.76 கோடி வருவாய்

புதுடில்லி: நாடு முழுவதும் மே 12 முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம், இந்திய ரயில்வே, ரூ.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, நாடு முழுதும், 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம், 13 ஆயிரத்து, 100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பயணியர் வசதிக்காக, டில்லியிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கான சிறப்பு ரயில் சேவையை, கடந்த, 12ல் ரயில்வே துவக்கியது. டில்லியிலிருந்து இருமார்க்கத்திலும் 15 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவாரத்தில், 3.80 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், 2.05 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.76.22 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைத்ததாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அறிவியல் ஆயிரம்

பாரம்பரிய வழக்கம் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள், கண்மாய்கள், நீர்நிலைகள் ஆகியன, குறிப்பிட்ட கால இடைவெளியில் துார் வாரப்பட வேண்டும். கோடையில் நீர் வற்றும் நேரத்தில், நீர் நிலைகள் துார்வாரப்படுவது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. இன்று துார் வார நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது. அணைப் பகுதிகளில் மணல் ஆக்கிரமித்தால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தண்ணீரின் அளவு குறையும் அணைகளில் துார் வார இயந்திரங்கள் தேவை. இந்த மணலை, அப்படியே விட்டு விடாமல், விவசாயம், கட்டுமானம் போன்றவற்றுக்கு முறையாகப்பயன்படுத்த வேண்டும். தகவல் சுரங்கம் இயல்பான படிப்பு ஜப்பானில் படிப்பு என்பது திணிக்கப்பட்ட படிப்பாக இல்லாமல் இயல்பான படிப்பாக உள்ளது. அங்கு தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஜப்பானியர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எங்கு சென்றாலும் கையில் புத்தகத்துடன் செல்வது ஜப்பானியர்களின் வழக்கம். எந்த மொழியில்…

Read More

மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஊரடங்கின் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மின்கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த 5ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 18க்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Read More

Manicka Tagore Member of parliament

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியூர் கிராமத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள்ஆய்வு செய்தார்.அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார் அந்த ஊராட்சியில் 800 பேருக்கு அட்டைதாரர்கள் பதிந்துள்ளார்கள்.ஆனால் 70 நபர்கள் தான் வேலை தான் வழங்கியுள்ளனர்.மேலும் அங்குள்ள பெண்களிடம் 100 நாட்களும் முழுமையாக வேலை செய்து உள்ளீர்களா? வேலை முழுமையாக வழங்கி உள்ளார்களா? என்று பல்வேறு குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.எனவே இந்த விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை தற்போது உள்ள விதிகளை மாற்றி 100% இந்த மாவட்டத்தில் வழங்க வேண்டும் அப்போதுதான் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் ஏழ்மையும் போக்க முடியும்.என்று கூறினார்.

Read More

Kkssr Ramachandran

இன்று அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள சலவை தொழிலாளா்கள் சுமார் 500 நபா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. #ondrinaivomvaa #மக்கள்_பணியில்_திமுக

Read More

ஜாம்பவானுக்கு நான் விடுத்த சவால் தவறானது- யுவராஜ் சிங்

ஜாம்பவானுக்கு விடுத்த சவால் தவறானது என்றும் கண்களை கட்டிக்கொண்டு பேட்டால் பந்தை அடிப்பதை இந்த வாரத்துக்குள் செய்ய முயற்சிப்பேன் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பந்தை பேட்டின் விளிம்பால் மேல்வாக்கில் 25-க்கும் அதிகமான ஷாட்டுகள் இடைவிடாமல் அடித்து ஒரு வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதை சவாலாக ஏற்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இதே போல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவரது சவாலை ஏற்று தெண்டுல்கர் சற்று வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார். தனது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பார்க்காமலேயே சிறிது நேரம் பேட்டின் விளிம்பால் பந்தை தொடர்ச்சியாக மேலே தட்டிவிட்டபடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம்…

Read More

டெல்லியில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது: தளர்வுகள் குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 299 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளால் இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய 4-வது மாநிலமாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டினாலும், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.‘‘நாங்கள் படிப்படியாக பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை நோக்கி நகர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் காலம் பயன்படுத்தப்பட்டது. 20 பயணிகளுடன் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் பேருந்தில் ஏறும்போது, இறங்கும்போது ஸ்கிரீன் செய்யப்படுவார்கள். மேட்ரோ ரெயில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சினிமா திரையரங்கள், சலூன்கள் திறக்கப்படாது.டாக்சிஸ் உள்பட நான் டயர்கள் உள்ள வாகனங்கள் இரண்டு பயணிகளுடன் பயணிக்க…

Read More

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு கொரோனா – மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆகும். சென்னை:தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 490 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல் உள்பட). எஞ்சிய 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆகும். இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.

Read More

சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்றார்

சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மேலவை உறுப்பினர்களும் இன்று மதியம் பதவி ஏற்றனர். மும்பை: சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ந் தேதி மகாராஷ்டிர முதல்- அமைச்சராக பதவி ஏற்றார். இவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ (எம்எல்சி) இல்லை. இதனால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகி முதல்-மந்திரியாக தொடர்வார் என கூறப்பட்டது.  ஆனால் கொரோனா பிரச்சினையால் மேலவை தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. இதனால் அவரது முதல்-மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் திடீரென மராட்டிய சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. வரும் 21-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. சட்டமேலவையில் 9 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர்…

Read More