அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 48 ஆயிரத்து 19 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 26 லட்சத்து 38 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 780 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.   
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளில் அந்நாட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் தற்போது வரை 15 லட்சத்து 27 ஆயிரத்து 951 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. 
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 90,980ஸ்பெயின் – 27,650இங்கிலாந்து – 34,636பிரேசில் – 16,122இத்தாலி – 31,908பிரான்ஸ் – 28,108ஜெர்மனி – 8,049ஈரான் – 6,988கனடா – 5,782பெல்ஜியம் – 9,080மெக்சிகோ – 5,177நெதர்லாந்து – 5,680

Related posts

Leave a Comment