ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு: புதிய விதிமுறைகள் அறிவிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது ஊரடங்கை நான்காவது முறையாக மே 31 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு
வெளியிட்டது.

இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள துடன் வைரஸ் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வரையறை செய்யும் பொறுப்பை மாநில அரசுகளிடமே மத்திய அரசு
கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 54 நாட்கள் முடிவடைந்த நிலையில் மே 31 வரை நீட்டிக்கும்படி தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையமும் மத்திய மாநில அரசுகளுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து நான்காம் கட்டமாக மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை
அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது.இதில் பல புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் கண்டு வரையறை செய்வது
போக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே கொடுத்துள்ளது.

Related posts

Leave a Comment