கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் 10-ந்தேதி தொடங்க இருந்த டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக 5-வது டி.என்.பி.எல் தொடர் ஜூன்10-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

Related posts

Leave a Comment