சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்றார்

சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மேலவை உறுப்பினர்களும் இன்று மதியம் பதவி ஏற்றனர்.

மும்பை:

சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ந் தேதி மகாராஷ்டிர முதல்- அமைச்சராக பதவி ஏற்றார். இவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ (எம்எல்சி) இல்லை. இதனால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாகி முதல்-மந்திரியாக தொடர்வார் என கூறப்பட்டது. 

ஆனால் கொரோனா பிரச்சினையால் மேலவை தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. இதனால் அவரது முதல்-மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் திடீரென மராட்டிய சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. வரும் 21-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது.

சட்டமேலவையில் 9 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் மட்டும் மனுதாக்கல் செய்தனர். இதனால் 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில் உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மேலவை உறுப்பினர்களும் இன்று மதியம் பதவி ஏற்றனர்.

Related posts

Leave a Comment