சிறப்பு ரயில்கள் மூலம் ரயில்வேக்கு ரூ.76 கோடி வருவாய்

புதுடில்லி: நாடு முழுவதும் மே 12 முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம், இந்திய ரயில்வே, ரூ.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, நாடு முழுதும், 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம், 13 ஆயிரத்து, 100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பயணியர் வசதிக்காக, டில்லியிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கான சிறப்பு ரயில் சேவையை, கடந்த, 12ல் ரயில்வே துவக்கியது. டில்லியிலிருந்து இருமார்க்கத்திலும் 15 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவாரத்தில், 3.80 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், 2.05 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.76.22 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைத்ததாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment