சென்னையில் பாதிப்பில்லாத 33 தெருக்கள் விடுவிப்பு

சென்னை : சென்னையில் பாதிப்பில்லாத, 33 தெருக்களை, மாநகராட்சி விடுவித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள தெருக்களின் எண்ணிக்கை, 701 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், கொரோனாவால், 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆலந்துார், பெருங்குடி போன்ற மண்டலங்களில், பாதிப்பு குறைந்து வருகிறது.இந்நிலையில், பாதிப்பு ஏற்படும் தெருக்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 701 தெருக்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

மேலும், 14 நாட்களுக்கு, புதிதாக தொற்று ஏற்படாத தெருக்கள் விடுவிக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று மட்டும், 33 தெருக்களை, மாநகராட்சி விடுவித்துள்ளது.

மண்டல வாரியாக விடுவிக்கப்பட்ட தெருக்கள்:

திருவொற்றியூர்: தெற்கு மாதா தெரு.மணலி: அப்பல்லோ ஆர்ம்ஸ்டாங் நகர், 4வது தெரு.ராயபுரம்: எம்.கே.கார்டன்.திரு.வி.க.நகர்: கோவர்தனதாஸ் தெரு, ஜெய் பீம் நகர், பி.எஸ்.மூர்த்தி நகர், இ பிளாக், காந்தி நகர், பய்யம் தெரு, வாசுகி நகர், 6வது தெரு, தலைமை செயலக காலனி, காட்டூர் நல்லமுத்து தெரு, டெமோல்லஸ் சாலை.அம்பத்துார்: முத்து வள்ளி தெரு, பெரியார் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 5, 6வது பிளாக் முகப்பேர் கிழக்கு.

தேனாம்பேட்டை: சங்கரபுரம், டி.எச்.சாலை, அயோத்திய நகர், பி.வி.கோவில் முதல் தெரு, லயட்ஸ் காலனி, கபாலி நகர், 3வது தெரு, பேயாண்டியம்மா கோவில் தெரு.கோடம்பபாக்கம்: இந்திரா தெரு, சாலிகிராமம்.வளசரவாக்கம்: எம்.எம்.டி.ஏ., காலனி, மதுரவாயல், காவலர் குடியிருப்பு, முனியப்பன் நகர், ராஜிவ் காந்தி நகர், திருவள்ளூர் தெரு, டவா குடியிருப்பு, சிங்கார நாயக்கர் தெரு.அடையாறு: ஆண்டாள் நகர்.

Related posts

Leave a Comment